கனரக தொழில்துறை அமைச்சகமானது 2047 ஆம் ஆண்டு வாகனவியல் கொள்கைத் திட்டத்தினை (AMP 2047) அறிமுகப்படுத்தியுள்ளது.
இது உலகளாவிய வாகன உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் இந்தியாவை ஒரு முன்னணி நாடாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 2030, 2037 மற்றும் 2047 ஆம் ஆண்டுகளுக்காக என்று சில மேம்பாட்டு இலக்குகளை நிர்ணயிக்கும்.
இந்த முன்னெடுப்பில் மின்சாரம், வணிகம், சாலைகள் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற அமைச்சகங்களுக்கிடையே ஒருங்கிணைப்பு அடங்கும்.
இது அசல் உபகரண உற்பத்தியாளர்கள் (OEM), வாகனக் கூறு உற்பத்தி நிறுவனங்கள், கொள்கை உருவாக்க அமைப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் பயனர்களை உள்ளடக்கிய ஒரு தொழில்துறை தலைமையிலான உத்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.