இந்திய அரசின் விதி 12 (பணி நடைமுறைப் படுத்துதல்) விதிகள், 1961
November 25 , 2019 2217 days 956 0
அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் குடியரசுத் தலைவரின் ஆட்சியை ரத்து செய்ய மத்திய அரசானது பணி நடைமுறைப் படுத்துதல் விதிகளின் ஒரு ‘சிறப்புப் பிரிவை’ பயன்படுத்தியுள்ளது.
1961 ஆம் ஆண்டு இந்திய அரசின் (பணி நடைமுறைப் படுத்துதல்) விதிகள் 12 ஆனது பிரதமரை தனது விருப்பப்படி நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளிலிருந்து தனித்துச் செயல்பட அனுமதிக்கின்றது.
அவர் தேவை என்று கருதினால் அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல் கூட முடிவுகளை எடுக்க முடியும்.
விதி 12 இன் கீழ் எடுக்கப்பட்ட எந்தவொரு முடிவிற்கும் அமைச்சரவை பின்னர் தனது ஒப்புதலை வழங்க முடியும்.