இந்திய அரசியலமைப்பின் வரலாறு குறித்த டிஜிட்டல் கண்காட்சி
December 13 , 2019 2061 days 635 0
2019 ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று ‘இந்திய அரசியலமைப்பின் வரலாறு குறித்த டிஜிட்டல் கண்காட்சியானது புது தில்லியில் திறந்து வைக்கப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வானது 1946 ஆம் ஆண்டில் இந்த நாளில் நடத்தப்பட்டதால், இது ஒரு முக்கியமான தினமாகக் கருதப்படுகின்றது.
நடப்பு ஆண்டான 2019 ஆம் ஆண்டானது இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதன் 70வது ஆண்டைக் குறிக்கின்றது.
இது பாராளுமன்ற அருங்காட்சியகம், மக்களவை செயலகத்தின் காப்பகங்கள் மற்றும் அவுட்ரீச் & தகவல் தொடர்பு அமைப்பு (Bureau of Outreach and Communication (BOC)) ஆகியவற்றுடன் இணைந்து மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டது.