TNPSC Thervupettagam

இந்திய அறிவுசார் நிறுவனங்களுக்கான தேசிய அங்கீகாரப் புள்ளிகள் வழங்கீட்டுக் கட்டமைப்பு

April 17 , 2023 760 days 291 0
  • அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் (HEI) தேசிய அங்கீகாரப் புள்ளிகள் வழங்கீட்டுக் கட்டமைப்பு (NCrF) செயல்படுத்தப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (UGC) உத்தரவிட்டுள்ளது.
  • தேசிய அங்கீகாரப் புள்ளிகள் வழங்கீட்டுக் கட்டமைப்பு என்பது கல்வி, தொழில்சார் மற்றும் அனுபவக் கற்றல் உள்ளிட்ட பல பரிமாணங்களில் கல்விக்கான அங்கீகாரப் புள்ளிகள் பெறுதலின் அடிப்படைக் கொள்கைகளை வகுத்து அதனைச் செயல் படுத்தும் ஒரு கட்டமைப்பாகும்.
  • இதன் மூலம், மாணவர்கள் (அனைத்து நிலைகளிலும்) அனைத்து பாடப் பிரிவுகளிலும், இயங்கலை, எண்ணிம மற்றும் கலப்பு கற்றல் போன்ற அனைத்து வழியான கல்வி மற்றும் கற்றலுக்கான அங்கீகாரப் புள்ளிகளைப் பெறுவர்.
  • இந்திய மாணவர்கள் புராணங்கள், வேதங்கள் மற்றும் பிற கூறுகள் உட்பட இந்திய அறிவுசார் அமைப்புகளின் பல்வேறு அம்சங்களில் தங்கள் நிபுணத்துவத்தினைப் பெறுவதற்கான அங்கீகாரப் புள்ளிகளைப் பெறுவார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்