இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) ஆனது அருகி வரும் கழுகு இனங்களின் முதல் நாடு தழுவிய மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு அறிக்கையை வெளியிட்டது.
17 மாநிலங்களில் சுமார் 216 தளங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, சுமார் 70% தளங்களில் கூடு கட்டும் நிகழ்வு பதிவாகவில்லை என்பதைக் கண்டறிந்தது.
அனைத்து ஆவணப்படுத்தப்பட்டக் கூடுகளிலும் 54% ஆனது பாதுகாக்கப்பட்டப் பகுதிகளில் உள்ளன என்ற நிலையில்அவை அவற்றின் முக்கிய வளங்காப்புப் பங்கைக் காட்டுகின்றன.
வெண்ம முதுகுக் கழுகு, இந்தியக் கழுகு, மெலிந்த அலகு கொண்ட கழுகு மற்றும் செந்தலைக் கழுகுகள் என நான்கு மிக அருகி வரும் இனங்கள் மதிப்பிடப்பட்டன.
மத்தியப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் ஆகியவை இந்தியாவின் அறியப் பட்ட கழுகுக் கூடுகளில் சுமார் 63% பங்கினைக் கொண்டுள்ளன.
இந்த மதிப்பீடு வாழ்விட இழப்பு, உணவுப் பற்றாக்குறை மற்றும் டைக்ளோஃபெனாக் நஞ்சேற்றம் ஆகியவற்றை முக்கிய அச்சுறுத்தல்களாக எடுத்துக்காட்டியது.
வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் (1972) முதலாம் அட்டவணையின் கீழ் கழுகுகள் பாதுகாக்கப்படுகின்றன என்பதோடுமேலும் அவை கழுகு வளங்காப்பிற்கான செயல் திட்டத்தின் (2020–25) கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.