இந்திய ஆயுதப் படைகளின் கூட்டுப் பயிற்சிக்கான கோட்பாடு - 2017
November 15 , 2017 2728 days 910 0
தலைமை அலுவலர் குழுத்தலைவர் (Chairman Cheifs of Staff Commitee) மற்றும் இந்திய கடற்படைத் தளபதியான அட்மிரல் சுனில் லம்பா 2017-ஆண்டின் இந்திய ஆயுதப் படைகளின் கூட்டுப் பயிற்சிக்கான கோட்பாட்டினை வெளியிட்டுள்ளார்.
முப்படைகளின் ஈடுபாட்டோடு ஒருங்கமைவுக் கூட்டிணைவு முறையில் (Collegiate Manner) இந்தக் கோட்பாடு தயார் செய்யப்பட்டுள்ளது.
உகந்த நிலையிலான வள ஆதாரங்களின் பயன்பாடு மற்றும் மேம்பட்ட செயல்திறத்திற்காக இந்திய முப்படைகள் மற்றும் பிற பங்கெடுப்பாளர்களுக்கிடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்திசைவை மேம்படுத்துவதற்காக இந்த கோட்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.