இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வானது முன்ஜாமீனை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வழங்க முடியாது என்றும் விசாரணை முடியும் வரை அதன் வரம்பு (முன்ஜாமீன்) தொடரும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Code of Criminal Procedure - CrPC) பிரிவு 438ன் நோக்கம் குறித்த தில்லி தலைநகரப் பகுதி அரசு (எதிர்) சுசிலா அகர்வால் என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் குறிப்புரையின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பானது வழங்கப் பட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 438 (முன்ஜாமீன்) ஆனது ஒருவரைக் கைது செய்யப் படுவதிலிருந்துப் பாதுகாக்கும் வகையில் முன்ஜாமீன் வழங்குவதற்கான வழிகாட்டுதலுடன் தொடர்புடையதாகும்.
இந்த விதியானது அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு மட்டுமே முன்ஜாமீன் வழங்குவதற்கான அதிகாரத்தை அளிக்கின்றது.