TNPSC Thervupettagam

இந்திய எரிசக்தி புள்ளிவிவரங்கள் 2026

April 2 , 2026 13 hrs 0 min 106 0
  • தேசியப் புள்ளிவிவர அலுவலகம் “இந்திய எரிசக்தி புள்ளிவிவரங்கள் 2026” என்ற வெளியீட்டை வெளியிட்டது.
  • இது நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற எரிசக்தி ஆதாரங்களின் இருப்பு, திறன், உற்பத்தி, நுகர்வு மற்றும் இறக்குமதி-ஏற்றுமதி குறித்த தரவுகளை வழங்குகிறது.
  • 2024-25 ஆம் நிதியாண்டில் மொத்த முதன்மை எரிசக்தி விநியோகம் 2.95% அதிகரித்து 9,32,816 KToe-ஐ எட்டியது.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 47,04,043 மெகாவாட்டை எட்டியது என்ற நிலையில் இதில் சூரிய ஆற்றல் சுமார் 71% என்ற அதிகபட்ச பங்கைக் கொண்டுள்ளது.
  • நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 2,29,346 மெகாவாட்டாக அதிகரித்து ள்ளது மற்றும் மின் உற்பத்தியும் சீரான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
  • தனிநபர் எரிசக்தி நுகர்வு அதிகரித்துள்ளது என்பதோடு மேலும் மின் கடத்துதல் மற்றும் விநியோக இழப்புகள் சுமார் 22%-லிருந்து 17%-ஆகக் குறைந்துள்ளன.
  • நிலக்கரி தொடர்ந்து முதன்மையான எரிசக்தி ஆதாரமாக இருந்தது அதே நேரத்தில் மொத்த இறுதி எரிசக்தி நுகர்வு இக்காலகட்டத்தில் 30%-க்கும் அதிகமாக அதிகரித்து உள்ளது.
  • எரிசக்தி துறைக்கான கடன் ஓட்டம் 2021 ஆம் ஆண்டில் ₹1,688 கோடியாக இருந்த நிலையில் 2025 ஆம் ஆண்டில் அது ₹10,325 கோடியாக கணிசமாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்