TNPSC Thervupettagam

இந்திய எரிவாயு பரிமாற்றச் சந்தையில் ONGC

May 29 , 2022 1428 days 1237 0
  • எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழக நிறுவனமானது, இந்திய எரிவாயு பரிமாற்றச் சந்தையில் வீட்டு உபயோக எரிவாயுவை வர்த்தகம் செய்யும் இந்தியாவின் முதல் ஆய்வு மற்றும் உற்பத்தி நிறுவனமாக மாறியது.
  • ONGC என்பது அரசுக்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தி நிறுவனம் ஆகும்.
  • இது 1956 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதோடு, இதன் தலைமையகம் புது டெல்லியில் உள்ளது.
  • இது இந்தியாவின் கச்சா எண்ணெயில் 70 சதவீதத்தினையும் அதன் இயற்கை எரிவாயுவில் 84 சதவீதத்தினையும் உற்பத்தி செய்கிறது.
  • இந்திய எரிவாயு பரிமாற்றச் சந்தை என்பது இந்தியாவின் முதல் தேசிய அளவிலான தானியங்கு எரிவாயு பரிமாற்றச் சந்தையாகும்.
  • இது கொள்முதல் செய்வோர் மற்றும் விற்பனையாளர் ஆகிய இரு தரப்பினரும் எரிவாயு வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற இடமாகும்.
  • இது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தின் ஒழுங்கு முறைக் கட்டமைப்பின் கீழ் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்