TNPSC Thervupettagam

இந்திய ஒன்றிய அரசின் நிதிநிலையறிக்கை 2026

February 4 , 2026 14 hrs 0 min 20 0
  • நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2026 அன்று ஒன்றிய அரசின் நிதிநிலையறிக்கையை தாக்கல் செய்தார்.
  • இந்தியாவின் வரலாற்றில் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று நிதி நிலையறிக்கை தாக்கல் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
  • இந்த நிதி நிலையறிக்கை தற்சார்பை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், இந்தியாவின் உலகளாவியப் போட்டித்தன்மையை மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நிதி நிலையறிக்கையில் உள்ள மொத்த நிதித் தொகை ₹53.5 லட்சம் கோடி ஆகும்.
  • இதன் திட்டம் பின்வரும் மூன்று 'கடமைகளில்' கவனம் செலுத்துகிறது: பொருளாதார வளர்ச்சி, மக்களின் கனவுகளுக்கு உதவுதல் மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்குதல்.
  • இது, உயிரி மருத்துவ சக்தி, குறைக் கடத்திகள், ஜவுளி, இரசாயனங்கள், அரிய வகை தனிமங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட ஏழு மூலோபாய மற்றும் முன்னணித் துறைகளில் உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) நிதிப் பற்றாக்குறை 4.3% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.
  • சாலைகள் மற்றும் பாலங்கள் போன்ற பெரிய உள்கட்டமைப்புகளைக் கட்டுவதற்காக அரசாங்கம் ₹12.2 லட்சம் கோடி செலவிடவுள்ளது, இது மூலதனச் செலவு (Capex) என்று அழைக்கப்படுகிறது.
  • 2026-27 நிதியாண்டுக்கான நிகர சந்தைக் கடன் ₹11.73 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

பணம் மற்றும் வரிகள்

  • வருமான வரிச் சட்டம் 2025 என்ற புதிய சட்டம் ஏப்ரல் 1, 2026 அன்று நடைமுறைக்கு வரும்.
  • தனிநபர்களுக்கான தற்போதைய வருமான வரி வரம்புகளில் எந்த மாற்றங்களும் இல்லை.
  • இந்தியத் தரவு மையங்களைப் பயன்படுத்தி மேகக் கணினி சேவைகளை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 2047 ஆம் ஆண்டு வரை வரி விலக்கு அளிக்கப்படும்.
  • Futures And Options வர்த்தகத்திற்கான பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வரி (STT) அதிகரிக்கப் பட்டுள்ளது.
  • 17 புற்றுநோய் மருந்துகளின் விலையைக் குறைக்கும் நோக்கில், அவற்றுக்கான சுங்க வரி (இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி) குறைக்கப்பட்டுள்ளது.
  • லித்தியம்-அயன் மின்கலன்கள் மற்றும் விமானங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப் படும் பாகங்களுக்கான அடிப்படை சுங்க வரி நீக்கப்பட்டுள்ளது.
  • வரி மாற்றங்கள் காரணமாக சோப்புகள், சலவைத் தூள்கள் மற்றும் குடைகளின் விலை உயரக் கூடும்.

போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு

  • இந்திய ரயில்வேக்கு ₹2.93 லட்சம் கோடி என்ற அதிக்கப்பட்ச அளவிலான முதலீடு கிடைக்கவுள்ளது.
  • மும்பை-புனே மற்றும் சென்னை-பெங்களூரு போன்ற வழித்தடங்கள் உட்பட ஏழு புதிய அதிவேக ரயில் (HSR) வழித்தடங்களை அரசாங்கம் அமைக்கும்.
  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருபது புதிய நீர்வழிகள் திறக்கப் படும்.
  • துர்காபூரில் ஒரு சிறப்பு மையத்துடன் கூடிய புதிய கிழக்குத் கடற்கரை தொழில் வழித் தடம் ஒன்று அமைக்கப்படும்.
  • புதிய அதிவேக ரயில் வழித்தடங்களில் இரண்டு சென்னைக்கு  கிடைக்கும்.

அறிவியல் மற்றும் தொழில்துறை

  • இந்தியா தனது சொந்த கணினி சிப்களைத் தயாரிப்பதற்கு உதவும் வகையில், இந்திய குறைகடத்தி இயக்கம் (ISM) 2.0 தொடங்கப்பட்டது.
  • மருந்துகள் தயாரிப்பதற்கு உதவும் வகையில், உயிரி மருத்துவ சக்தி (Biopharma SHAKTI - மூலோபாய சுகாதாரம் மற்றும் அறிவு கண்காணிப்பு முயற்சி) திட்டத்திற்கு ₹10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • விண்வெளித் துறைக்கு அதன் திட்டங்களுக்காக ₹13,705 கோடி வழங்கப்பட்டது.
  • 200 பழைய தொழில்துறைப் பகுதிகளை (மரபுசார் தொழிற்பகுதிகள்) நவீனமயமாக்கி மேம்படுத்த அரசாங்கம் உதவும்.
  • இந்தியா சிறந்த விளையாட்டு உபகரணங்களைத் தயாரிக்க உதவும் வகையில், "விளையாட்டுப் பொருட்கள்" க்காக ஒரு சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

சுகாதாரம் மற்றும் கல்வி

  • சுகாதார அமைச்சகத்திற்கு ₹1.06 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.
  • வட இந்தியாவில் இரண்டாவது தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (நிம்ஹான்ஸ்-2) அமைக்கப்படும்.
  • மருத்துவ சிகிச்சைக்காக அதிக மக்களை இந்தியாவிற்கு ஈர்க்கும் வகையில், அரசாங்கம் ஐந்து பிராந்திய மருத்துவ மையங்களை அமைக்கப்படும்.
  • கார்ட்டூன்கள் மற்றும் விளையாட்டுகளை உருவாக்குவதைக் கற்றுக்கொள்வதற்காக  புதிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் AVGC - Animation, Visual Effects, Gaming, and Comics தொடர்பான சிறப்பு ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
  • கிழக்கு இந்தியாவில் ஒரு புதிய தேசிய வடிவமைப்பு நிறுவனம் (National Institute of Design -NID) திறக்கப்படும்.

விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு

  • விவசாயிகளுக்கு உதவுவதற்காக பாரத்-விஸ்தார் (Bharat-VISTAAR - Versatile Information System for Targeted Agricultural Assistance and Resources) என்றழைக்கப்படும் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு (AI) கருவி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • விவசாயிகள் அதிக அளவில் தேங்காய், முந்திரி, கோகோ மற்றும் சந்தன மரங்களை பயிரிட அரசாங்கம் உதவும்.
  • பெண் தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்ய உதவும் வகையில் "SHE மார்ட்ஸ்" திறக்கப்படும்.
  • விவசாயிகளுக்கான பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) திட்டத்திற்கு ₹63,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பாதுகாப்பு மற்றும் பிற அம்சங்கள்

  • பாதுகாப்புச் செலவினம் (ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கான நிதி) 15.3% அதிகரித்து ₹7.84 லட்சம் கோடியாக உயரும்.
  • நாட்டின் பாதுகாப்பைப் பேணுவதற்காக உள்துறை அமைச்சகத்திற்கு ₹2.55 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.
  • இளைஞர்கள் விளையாட்டுகளில் சிறந்து விளங்க உதவுவதற்காக கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது.
  • தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் சிறப்புத் தாதுக்களைக் கண்டறிவதற்காக ஒடிசா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சிறப்பு "அருமண் தாது வழித் தடங்கள்" அமைக்கப்படும்.
  • உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் ஐந்து பல்கலைக் கழக நகரங்கள் அமைக்கப்படும் என்று 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்