TNPSC Thervupettagam

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) 100 ஆம் ஆண்டு நிறைவு

December 29 , 2025 3 days 50 0
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) 2025 ஆம் ஆண்டில் அதன் 100 ஆம் ஆண்டுகளை நிறைவு செய்தது.
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது முதன்முதலில் 1920 ஆம் ஆண்டில் தாஷ்கண்டில் M.N. ராய், முகமது அலி, M.P.T. ஆச்சார்யா மற்றும் முகமது ஷபிக் உள்ளிட்ட இந்திய புரட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது.
  • இது 1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கான்பூர் கம்யூனிஸ்ட் மாநாட்டில் இந்தியாவில் அதிகாரப் பூர்வமாக நிறுவப்பட்டது.
  • சிங்காரவேலு செட்டியார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலைவராக இருந்தார்.
  • "இன்குலாப் ஜிந்தாபாத்" என்ற முழக்கம் மௌலானா ஹஸ்ரத் மோஹானியால் உருவாக்கப் பட்டு, கான்பூர் மாநாட்டில் எழுப்பப்பட்டது.
  • அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) மற்றும் அகில இந்திய கிசான் சபா (AIKS) போன்ற அமைப்புகளை உருவாக்க CPI உதவியது.
  • அகில இந்திய மாணாக்கர் கூட்டமைப்பு (AISF), முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (PWA), மற்றும் இந்திய மக்கள் நாடக சங்கம் (IPTA) போன்ற அமைப்புகளையும் இது ஆதரித்தது.
  • தெலுங்கானா ஆயுதப் போராட்டம், தேபாகா இயக்கம் மற்றும் புன்னப்ரா-வயலார் போராட்டம் போன்ற முக்கிய இயக்கங்களுக்கு CPI முன்னிலை வகித்தது.
  • பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து முழுமையான சுதந்திரத்திற்கான கோரிக்கையை இந்த கட்சி ஆதரித்தது.
  • சுதந்திர இந்தியாவிற்கான அரசியலமைப்புச் சபையை உருவாக்குவதை CPI தீவிரமாக ஆதரித்தது.
  • M.N. ராய் 1934 ஆம் ஆண்டில் ஓர் அரசியலமைப்பை முன்மொழிந்தார்.
  • CPI ஆனது நில மறுபகிர்வு, தொழிலாளர் உரிமைகள், குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளை எழுப்பியது.
  • இந்தியாவில் கூட்டாட்சி மற்றும் மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத் தன்மையையும் இந்தக் கட்சி ஆதரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்