இந்திய காட்டெருமை விழாவின் இரண்டாவது பதிப்பு மார்ச் 8, 2026 அன்று ஒடிசாவில் உள்ள திப்ரிகார் வனவிலங்கு சரணாலயத்தில் நடைபெறும்.
இந்த விழா, உலகின் மிகப்பெரிய மாடு இனமான கவுர் (பாஸ் கவுரஸ்) என்று அழைக்கப் படும் இந்திய காட்டெருமையைக் கொண்டாடுகிறது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடந்த சமீபத்திய கணக்கெடுப்பில் சரணாலயத்தில் 848 காட்டெருமைகள் பதிவு செய்யப்பட்டன என்பதோடுஇது ஒரு வருடத்தில் 190 விலங்குகளின் அதிகரிப்பைக் காட்டுகிறது.
இந்தச் சரணாலயம் ஹிராகுட் நீர்த்தேக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது மற்றும் கிழக்கு இந்தியாவில் ஒரு முக்கியமான காட்டெருமை பாதுகாப்புப் பகுதியாக மாறி வருகிறது.
வாழ்விட இழப்பு மற்றும் வேட்டையாடுதல் காரணமாக கவுர் IUCN செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.