இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் - புதிய தலைவர்
May 4 , 2018 2626 days 1556 0
1981-ஆம் ஆண்டின் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மற்றும் முன்னாள் கர்நாடக தலைமைச் செயலாளரான சுபாஷ் சந்திர குந்தியா (Subhash Chandra Khuntia) இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Insurance Regulatory and Development Authority of India-IRDAI) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனங்களுக்கான கேபினேட் குழுவானது (Appointments Committee of the Cabinet -ACC) இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராக, 3 ஆண்டுகள் பதவிக் காலத்திற்கு சுபாஷ் சந்திர குந்தியாவின் நியமனத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது.
IRDAI-அமைப்பின் தலைவராக இருந்தS விஜயன் அவர்களின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி முடிவடைந்ததால் இப்பதவியானது இரு மாதங்களுக்கும் மேலாக நிரப்பப்படாமல் இருந்து வந்தது.
இந்தியாவில் காப்பீட்டு தொழில்துறையை ஒழுங்குமுறைப்படுத்துகின்ற மற்றும் மேம்படுத்துகின்ற ஓர் உச்ச சட்ட அமைப்பே (apex statutory body) இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆகும்.
1999-ஆம் ஆண்டின் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டத்தின் (Insurance Regulatory and Development Authority Act, 1999) கூறுகளின் படி இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது.