TNPSC Thervupettagam

இந்திய குடியரசுத் தினம் – ஜனவரி 26

January 27 , 2018 2666 days 1244 0
  • நாட்டின் 69-வது குடியரசுத் தினம் ஜனவரி 26-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக, நாட்டில் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளான ஜனவரி 26, 1950ஆம் தேதி இந்தியாவின் குடியரசுத் தினம் கொண்டாடப்படுகின்றது.
  • நாட்டில் முதல் முறையாக இவ்வாண்டு குடியரசுத் தின நிகழ்ச்சிகளுக்கு ஆசியான் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 10 தலைவர்கள் சிறப்பு விருந்தினராகக கலந்துக் கொண்டனர்.
  • ஆசியான் அமைப்பு தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளும், ஆசியான் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான  கூட்டுறவு 25 ஆண்டுகளும் நிறைவுற்றிருக்கும் இவ்வேளையில், இந்தியக் குடியரசு தின விழாவில் ஆசியான் அமைப்பினுடைய அனைத்து நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றிருப்பது முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
  • முழு சுயராஜ்ஜிய முழக்கத்தின் (Purna Suraj Diwas) ஆண்டு நிறைவோடு ஒருங்கிணையும் வகையில் முக்கியத்துவமளித்தது தேர்வு செய்யப்பட்ட நாளான 1950 ஆண்டின் ஜனவரி 26-ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.
  • மேலும் ஜனவரி 26, 1950-ல் தான் இந்திய சுதந்திரச் சட்டம் (Indian Independece Act) நீக்கப்பட்டது. மேலும் இந்த நாளில் தான் பிரிட்டிஷ் பேரரசின் ஓர் டொமினியானாக இல்லாமல்  இந்தியாவானது   ஓர் ஜனநாயக குடியரசு நாடாக  உருவாக்கப்பட்டது (Democratic Republic) .
  • 1930ஆம் ஆண்டு ஜனவரி 26ல் தான் பூர்ண சுயராஜ்ய திவாஸ் அல்லது காலணிய ஏகாதிபத்தியத்திலிருந்து நாடு முழு விடுதலை அடைந்திட வேண்டும் என்ற தீர்மானம் இந்திய தேசிய காங்கிரஸரால் நிறைவேற்றப்பட்டது.

ஆசியானைச் சேர்ந்த 10 நாடுகளாவன

  1. தாய்லாந்து
  2. வியட்நாம்
  3. இந்தோனேசியா
  4. மலேசியா
  5. பிலிப்பைன்ஸ்
  6. சிங்கப்பூர்
  7. மியான்மர்
  8. கம்போடியா
  9. லாவோஸ்
  10. புருனே.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்