2025 ஆம் ஆண்டு இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா (IISF) நிகழ்ச்சியானது ஹரியானாவின் பஞ்ச்குலாவில் நடைபெற்றது.
இந்த விழாவின் கருத்துரு, "Vigyan Se Samruddhi: for Aatmanirbhar Bharat" என்பதாகும்.
உயிரித் தொழில்நுட்பம், விண்வெளி, செயற்கை நுண்ணறிவு, பாரம்பரிய அறிவு ஒருங்கிணைப்பு மற்றும் சமூகம் மற்றும் கல்விக்கான அறிவியல் ஆகியவை இதில் கவனம் செலுத்தப்பட்ட ஐந்து பகுதிகளாகும்.
IISF 2025 ஆனது பொது மக்களின் ஈடுபாடு, அறிவியல் மனநிலை மற்றும் அமைச்சகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்துறை மற்றும் கல்வித் துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை நன்கு வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.