இந்திய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் - டிசம்பர் 18
December 19 , 2019 1973 days 1267 0
இத்தினமானது இந்தியாவில் உள்ள அனைத்து சிறுபான்மையினர் சமூகங்களின் மத நல்லிணக்கம், மரியாதை மற்றும் சிறந்த புரிதல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகின்றது.
சிறுபான்மையினர் உரிமைகள் தினமானது தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தினால் (National Commission for Minorities - NCM) அனுசரிக்கப் படுகின்றது.
மத்திய அரசு தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 1992ன் கீழ் NCM என்ற ஆணையத்தை அமைத்துள்ளது.
இந்தியாவில் உள்ள மதம் சார்ந்த ஆறு சமூகங்கள், அதாவது முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் சமணர்கள் ஆகியோர் இந்தியாவில் சிறுபான்மையினர் சமூகங்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.