ரோமில் நடைபெற்ற 88வது கோடெக்ஸ் நிர்வாகக் குழுவில் (CCEXEC88) இந்தியாவின் சிறு தானியத் தரநிலைகள் மற்றும் கோடெக்ஸ் குழுக்களில் அதன் பங்கு ஆகியன அது குறித்த அங்கீகாரத்தைப் பெற்றது.
கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் என்பது உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உணவுத் தர நிலைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் நடத்தை விதிகளின் தொகுப்பாகும்.
இது உணவுப் பாதுகாப்பை ஊக்குவிக்கிறது, நுகர்வோரைப் பாதுகாக்கிறது மற்றும் உலகளாவிய உணவு வர்த்தகத்தில் மிகவும் நியாயமான வர்த்தக நடைமுறைகளை ஆதரிக்கிறது.
இந்தியா, நறுமணப் பொருட்கள் மற்றும் சமையல் மூலிகைகளுக்கான கோடெக்ஸ் குழுவின் (CCSCH) தலைமைப் பொறுப்பினை 2014 ஆம் ஆண்டிலிருந்து கொண்டுள்ளது.