இந்திய சுகாதார நலத்துறையில் முதலீட்டிற்கான வாய்ப்பு
April 3 , 2021 1556 days 697 0
“இந்திய சுகாதார நலத்துறையில் முதலீட்டிற்கான வாய்ப்பு” என்ற அறிக்கை ஒன்றை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.
மருத்துவமனைகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் உபகரணங்கள், மருத்துவக் காப்பீடு, தொலைதூர மருத்துவம், தனியார் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பயணங்கள் (Medical Value Travel) உள்ளிட்ட இந்திய சுகாதாரநலத் துறையின் பல்வேறு பிரிவுகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை இந்த அறிக்கை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
2016 ஆம் ஆண்டு முதல் சுமார் 22% என்ற ஒட்டு மொத்த வருடாந்திர வளர்ச்சி வீதத்தில் இந்தியாவின் சுகாதார நலத் தொழில்துறைகள் வளர்ந்து வருகின்றன.
இந்த வீதத்தில், இந்த வளர்ச்சி 2022 ஆம் ஆண்டில் 372 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.