நுகர்வோர் விவகாரங்கள் துறை, சட்ட அளவியல் (இந்திய திட்ட நேரம்) விதிகள், 2026ஐ அறிவித்துள்ளது இதன் மூலம் இந்தியாவின் சட்ட, நிர்வாக, வணிக மற்றும் அதிகாரப் பூர்வ நோக்கங்களுக்கான கட்டாய நேரக் குறிப்பானாக இந்திய திட்ட நேரம் (IST), அதாவது UTC+5:30 மாற்றப்பட்டுள்ளது.
புது தில்லியில் உள்ள CSIR-தேசிய இயற்பியல் ஆய்வகமானது (NPLI) அதிகாரப்பூர்வ ISTக்குப் பயன்படுத்தப்படும் தேசிய நேர அளவுகோலான UTC(NPLI)-ஐ பராமரிக்கிறது.
பிராந்தியக் குறிப்புத் தரநிலை ஆய்வகங்கள் மற்றும் NavIC (இந்திய விண்மீன் தொகுப்புடனான வழிசெலுத்தல்) மூலம் அதிகாரப்பூர்வ IST பரப்பப்படும்.
தொலைத்தொடர்பு, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் மின் தொகுப்பு அமைப்புகள் வலையமைப்பு நேர நெறிமுறை (NTP) மற்றும் துல்லிய நேர நெறிமுறை (PTP)ஆகியவற்றைப் பயன்படுத்தி IST உடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
இந்த விதிகள் அரசிதழில் வெளியிடப்பட்ட 180 நாட்களுக்குப் பிறகு, சுமார் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைமுறைக்கு வரும், மேலும் 2009 ஆம் ஆண்டு சட்ட அளவியல் சட்டத்தின் கீழ் விதிகளுக்கு இணங்கத் தவறினால் அபராதம் விதிக்கப் படும்.