இந்திய திறன்கள் 2021 எனும் தேசிய அளவிலான போட்டி சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்தப் போட்டியில், 270 வெற்றியாளர்களுக்கு 61 தங்கம், 77 வெள்ளி, 53 வெண்கலம் மற்றும் 79 சிறப்புப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
‘இந்திய திறன்கள் 2021’ போட்டியில் 51 பதக்கங்களுடன், இந்த ஆண்டில் பங்கேற்ற 26 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் ஒடிசா முதலிடம் பிடித்துள்ளது.
இதில் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தைப்பெற்றது.
இதில் கேரளா மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
இந்தியா திறன்கள் 2021 என்ற போட்டியில் வெற்றி பெறும் அணிகள் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற உள்ள உலக திறன்கள் சர்வதேசப் போட்டியில் பங்கேற்கும் ஒரு வாய்ப்பைப் பெறும்.