இந்திய திவால்நிலை மற்றும் நொடித்தல் நிலை வாரியத்தின் விதிமுறைகளில் திருத்தங்கள்
June 17 , 2022 1161 days 491 0
இந்திய திவால்நிலை மற்றும் நொடித்தல் நிலை வாரியமானது அதன் திவால் விதி முறைகளைத் திருத்தியுள்ளது.
திருத்தப்பட்ட திவால் விதிமுறைகள் ஆனது தற்போது, பெருநிறுவனங்களின் திவால் செயல்முறையின் போது, கடன் வழங்குநர்கள் தங்களது பெருநிறுவனக் கடனாளிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றியத் தகவல்களையும், அது தொடர்பான பிற நிதித் தகவல்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
2016 ஆம் ஆண்டு திவால்நிலை மற்றும் நொடித்தல் நிலைக் குறியீடுகள் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களுக்கான திவால் மற்றும் நொடித்தல் நிலை நடவடிக்கைகளை நிர்வகிக்கும் ஒரு ஒருங்கிணைந்தக் கட்டமைப்பை உருவாக்குகிறது.