TNPSC Thervupettagam

இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் - ட்ரூனிக்ஸ்

June 21 , 2026 17 days 81 0
  • இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) ஆனது, ஃபால்கனுக்குப் பிறகு பிளாக்செயின் தொழில்நுட்பம் மற்றும் குறியாக்கச் சுற்றுச்சூழல் அமைப்பில் அதன் இரண்டாவது பெரிய திறந்தமூலப் பங்களிப்பான ட்ரூனிக்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.
  • ட்ரூனிக்ஸ் என்பது குறியாக்கத் தளங்கள், டிஜிட்டல் சொத்து சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல நிறுவன வலையமைப்புகளை உருவாக்க மற்றும் அளவிட வடிவமைக்கப்பட்ட நிறுவன அளவிலான பரவலாக்கப்பட்ட பேரேடு தொழில்நுட்பத் (DLT) தளமாகும்.
  • அதிபேரேடு அமைப்பு/ஹைப்பர்லெட்ஜர் ஃபேப்ரிக் என்பது லினக்ஸ் அறக்கட்டளையின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு திறந்த மூல நிறுவன பிளாக்செயின் கட்டமைப்பாகும்.
  • பிளாக்செயின் தொழில்நுட்பமானது தரவுகளை இணைக்கப்பட்ட தொகுதிகளாகச் சேமிக்கிறது மற்றும் பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான பதிவுகளை பராமரிக்க உதவும் அதே வேளையில், அங்கீகரிக்கப்படாத மாற்றங்களைத் தடுக்கும் மாற்ற முடியாத பேரேட்டை உருவாக்குகிறது.
  • குறியாக்கம் என்பது நில மனை, பொருட்கள் மற்றும் நிதிச் சாதனங்கள் போன்ற நிஜ உலக சொத்துகளின் உரிமைகளை பிளாக்செயின் வலையமைப்புகளில் பாதுகாக்கப் பட்ட டிஜிட்டல் குறியாக்கமாக மாற்றுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்