TNPSC Thervupettagam

இந்திய தொழிலாளர் இடம்பெயர்வு

February 10 , 2026 5 days 68 0
  • சவுதி அரேபியாவை விஞ்சி, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) 2025 ஆம் ஆண்டில் இந்திய திறன்சாரா தொழிலாளர்களுக்கான மிகப்பெரிய வெளிநாட்டு இடமாக மாறியது.
  • 2025 ஆம் ஆண்டில், 200,686 இந்தியத் தொழிலாளர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் புலம்பெயர்ந்த அதே சமயம் சவுதி அரேபியாவிற்கு 136,812 பேர் மட்டுமே சென்றனர்.
  • 2024 ஆம் ஆண்டில் சவுதி அரேபியா 167,598 தொழிலாளர்களுடன் முன்னணியில் இருந்த முந்தைய நிலையை இது மாற்றியமைத்துள்ளது.
  • ஒட்டு மொத்தமாக, 2025 ஆம் ஆண்டில் 449,110 இந்தியத் தொழிலாளர்கள் 11 முக்கிய தொழிலாளர்களை ஏற்கும் நாடுகளுக்குச் சென்றனர்.
  • கத்தாரில் இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் சரிவு காணப்பட்ட நிலையில், ஓமனில் 2025-ஆம் ஆண்டில் 29,158 அளவில் நிலையான வளர்ச்சி பதிவாகி ள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்புத் திட்டங்கள், அதிக ஊதியம், வரி இல்லாத வருமானம் மற்றும் தொழிலாளர்களுக்கு உகந்த கொள்கைகளே காரணமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்