இந்திய நாட்டினை நிகர சுழிய உமிழ்வு நிலைக்குக் கொண்டு செல்தல்
September 10 , 2022 976 days 559 0
இந்தியா 2050 ஆம் ஆண்டிற்குள் இலக்கை எட்ட வேண்டுமென்றால் 13.5 டிரில்லியன் டாலர் முதலீடு தேவைப்படும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
இந்தியா 2070 ஆம் ஆண்டிற்குள் அதன் நிகர-சுழிய உமிழ்வு இலக்கை அடைய வேண்டுமென்றால், இப்போதிலிருந்துப் பொருளாதாரத்திற்கு 10.1 டிரில்லியன் டாலர் என்ற அளவிலான முதலீடு தேவைப்படும்.
2070 ஆம் ஆண்டில் நிகர சுழியம் என்ற ஒரு இலக்கை அடைவதன் மூலம், 2036 ஆம் ஆண்டில் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியை 4.7% வரை உயர்த்தி 2047 ஆம் ஆண்டிற்குள் 15 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
2015 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட இந்தியாவின் தேசிய அளவில் நிர்ணயிக்கப் பட்டப் பங்களிப்பு (NDC) இலக்குகள் தற்போதையக் கொள்கைகள் மூலம் அடுத்த சில ஆண்டுகளுக்குள் முன்கூட்டியே எட்டப்படும்.
2030 ஆம் ஆண்டிலேயே இந்தியா உமிழ்வுகளில் உச்சத்தை எட்டக்கூடும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.