TNPSC Thervupettagam

இந்திய நிலக்கரிப் பரிமாற்றச் சந்தை

June 10 , 2020 1794 days 662 0
  • நிலக்கரித் துறையில் வணிக ரீதியில் சுரங்கத் துறையை மேம்படுத்துவதற்கு வேண்டி இந்தியா விரைவில் நிலக்கரி வர்த்தகத் தளத்தை அமைக்கவுள்ளது.
  • இந்த திட்டத்தின் கீழ், நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முழு நிலக்கரியும் நிலக்கரிப் பரிமாற்றச் சந்தைஎன்ற தளத்தில் வர்த்தகம் செய்யப்படும்.
  • நிலக்கரிப் பரிமாற்றம் ஒரு இணையவழி நிலக்கரி வர்த்தகத் தளமாக இருக்கும். அதில் விலை என்பது தேவை மற்றும் வழங்கல் அடிப்படையில் ஒரு வெளிப்படையான முறையில் நிர்ணயிக்கப் படும்
  • இந்தியாவின் முதல் நிலக்கரி வர்த்தகத் தளத்தை அமைப்பது மிகவும் குறிப்பிடத் தக்கதாகும். ஏனெனில் இது நிலக்கரித் துறையில் மிகுதியான அளவில் அதனை வாங்குபவர்களும் விற்பவர்களும் நுழைவதற்கு வழிவகுக்கிறது.
  • இந்தியாவில் நிலக்கரி ஒழுங்கான முறையில் விற்பனை செய்வதற்கான ஒரே வர்த்தகத் தளமாக நிலக்கரிப் பரிமாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்