TNPSC Thervupettagam

இந்திய நீதி அறிக்கை

April 10 , 2023 771 days 348 0
  • இந்திய நீதி அறிக்கையானது (IJR) 2019 ஆம் ஆண்டில் டாடா அறக்கட்டளை என்ற நிறுவனத்தினால் வெளியிடத் தொடங்கப்பட்டது.
  • இவ்வகையில் இது மூன்றாவது அறிக்கையாகும்.
  • இந்த அறிக்கையானது நீதி வழங்கீட்டின் முக்கிய 4 தூண்களாக விளங்கும் காவல் துறை, நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் சட்ட உதவி ஆகியவற்றின் ஒட்டு மொத்த தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப் பட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு இந்திய நீதி அறிக்கையில் (IJR), ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 18 பெரிய மற்றும் நடுத்தர மாநிலங்களில் கர்நாடகா மாநிலம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
  • இதில் தமிழகம் 2வது இடத்திலும், தெலுங்கானா 3வது இடத்திலும் உள்ளன.
  • குஜராத் மாநிலம் நான்காவது இடத்திலும், ஆந்திரா 5வது இடத்திலும் உள்ளன
  • உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆனது இப்பிரிவில் கடைசி இடமான 18வது இடத்தில் உள்ளது.
  • இதில் தலா ஒரு கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட ஏழு சிறிய மாநிலங்களின் பட்டியலில் சிக்கிம் முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
  • கோவா மாநிலம் ஆனது இப்பிரிவின் கடைசி இடமான ஏழாவது இடத்தில் உள்ளது.
  • இதில் தமிழக மாநிலத்தின் சிறைத்துறை முதலிடம் பெற்றுள்ளது.
  • அதைத் தொடர்ந்து கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
  • இதில் உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடைசி இடத்தில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்