2025 ஆம் ஆண்டு இந்திய நீர் மற்றும் நதிகள் மன்றம் என்பது நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் சமூக மற்றும் ஆளுகை (ESG) ஆபத்து குறைப்பு மற்றும் நதிப் படுகை அளவிலான ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒரு தேசிய தளமாகும்.
இது ஐக்கிய நாடுகளின் உலகளாவிய ஒப்பந்த தலைமை நிர்வாக அதிகாரி (UNGC CEO) நீர்க் கொள்கை, Water Resilience கூட்டணி, நீர் மேலாண்மைக்கான கூட்டணி (AWS) மற்றும் உலக வள நிறுவனம் (WRI) - இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப் பட்டது.
இந்தியாவின் முக்கிய நதிப் படுகைகளில் பருவநிலை மாற்றம், நகரமயமாக்கல் மற்றும் பிரித்துக் காணப்படும் நீர் நிர்வாகம் போன்ற சவால்களை இந்த மன்றம் கையாண்டது.