நான்கு நாட்கள் அளவிலான இந்திய பசிபிக் இராணுவ சுகாதாரப் பரிமாற்ற மாநாட்டினைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த மாநாடானது அமெரிக்க இந்திய-பசிபிக் படை மற்றும் ஆயுதப் படைகள் மருத்துவச் சேவை அமைப்பு ஆகியவற்றினால் இணைந்து நடத்தப்படுகிறது.
“நிரந்தரமற்ற, நிலையற்ற, சிக்கலான மற்றும் தெளிவற்ற உலகில் இராணுவ நலன்” (Military Healthcare in a Volatile, Uncertain, Complex and Ambiguous (VUCA) World) என்பதே இந்த மாநாட்டின் கருத்துருவாகும்.
இராணுவ மருத்துவத்தில் ஒரு கூட்டு தலைமைத்துவம் மற்றும் ஒத்துழைப்பினை மேம்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.