இந்தியா தனது இந்திய பசிபிக் கொள்கையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரான எஸ். ஜெய்சங்கர் கூட்டு இந்தியப் பெருங்கடல் உரையாடல் என்ற முன்னெடுப்புக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
இந்த உரையாடலின் சந்திப்பானது புது தில்லியில் நடத்தப் பட்டது.
இதுவரை, இந்திய - பசிபிக் கொள்கையானது இந்தியப் பெருங்கடலையும் அரேபியக் கடலையும் உள்ளடக்கியுள்ளது.
தற்பொழுது விரிவாக்கப்படும் புதிய கொள்கையின் படி, இப்பகுதியில் தற்பொழுது வளைகுடா நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா ஆகியவையும் அடங்க இருக்கின்றன.
முக்கியத்துவம்:
இந்த விரிவாக்கக் கொள்கையானது இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுப் பார்வை மற்றும் இந்திய - பசிபிக் கொள்கைக்கு உதவ இருக்கின்றது.
இந்தியாவின் கவனமானது பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்திற்குப் பதிலாக இந்திய – பசிபிக்கின் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் மீது உள்ளது.
இந்திய - பசிபிக் பகுதியின் மிக முக்கியமான கட்டுமானப் பகுதியாக ஆசியான் அமைப்பு விளங்குகின்றது.