இந்திய பசிபிக் முத்தரப்பு மேம்பாட்டு கூட்டுறவு நிதி
September 21 , 2022 1156 days 536 0
இந்திய பசிபிக் முத்தரப்பு மேம்பாட்டுக் கூட்டுறவினை நிறுவுவதற்கு இந்தியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
இது குறிப்பாக சர்வதேச சூரியசக்திக் கூட்டணியின் கட்டமைப்பில் மேம்பாட்டுத் திட்டங்களை எளிதாக்க வழி வகுக்கும்.
இது இந்தியப் புத்தாக்க மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, மற்றச் சமூகங்களின் தேவைகளுடன் அவற்றிற்குள்ள தொடர்புகளை விளக்குவதற்காக என்று ஒரு தளத்தை வழங்குகிறது.
பூடான், பப்புவா நியூ கினியா மற்றும் செனகல் ஆகிய நாடுகளில் இந்தியா மற்றும் பிரான்சு ஆகியவை இணைந்து ஏற்படுத்தும் தாக்கத்தை வெளிக்காட்டும் மூன்று நாடுகளில் சர்வதேச சூரியசக்தி கூட்டணி தற்போது திட்டங்களை உருவாக்கியுள்ளது.