இந்திய பாலூட்டிகளுக்கான “குடிமகன்” அறிவியல் களஞ்சியம்
October 31 , 2018 2442 days 924 0
பெங்களூரில் உள்ள உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்தியப் பாலூட்டிகள் என்றழைக்கப்படுகின்ற, ஒரு புதிய, இந்தியப் பாலூட்டிகள் மீதான குடிமகன் - அறிவியல் களஞ்சியத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்.
இது இந்தியாவின் திட்டமான பல்லுயிர்ப் பெருக்க வரைபடத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். பல்லுயிர்ப் பெருக்க வரைபடத் திட்டம் என்பது உயிர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு உயிர்த் தகவலியல் அமைப்பாகும்.
இது இலவசமாக அணுகக்கூடிய ஒரு நேரடி இணைய தளமாகும் (mammalsofindia.org).
இது அனைத்து இந்தியப் பாலூட்டிகள், அதனைப் பற்றிய அடையாளங் காணுதல், வித்தியாசங்கள், வசிப்பிடங்கள், இனப்பெருக்க மற்றும் இனப்பெருக்கமல்லாத சூழலியல், உயிரினங்களின் பாதுகாப்பு ஆகிய தகவல்களுடன் பயிர்களுக்கான தனிப்பட்ட தகவல் பக்கங்களை உருவாக்கிட எண்ணுகின்றது.