TNPSC Thervupettagam

இந்திய மகளிர் காவல் துறை அதிகாரிகளுக்கு ஐ.நா. கௌரவ விருது

September 14 , 2019 2117 days 728 0
  • தெற்கு சூடானில் உலக அமைப்பின் பணியில் காவல் துறை அதிகாரிகளின் பாராட்டத்தக்க சேவைகளுக்காக ஐந்து இந்தியப் பெண் காவல்துறை அதிகாரிகள் ஐக்கிய நாடுகள் சபையினால் கௌரவிக்கப்பட்டனர்.
  • ஐ.நா. பதக்கம் வழங்கப்பட்ட பெண் அதிகாரிகள் பின்வருமாறு
    • ரீனா யாதவ் (சண்டிகர் காவல்துறை ஆய்வாளர்)
    • கோபிகா ஜாகிர்தார் (மகாராஷ்டிரா காவல்துறையின் துணைக் கண்காணிப்பாளர்)
    • பாரதி சமந்திரே (உள்துறை அமைச்சகத்தின் காவல்துறைக் துணைக் கண்காணிப்பாளர்)
    • ராகினி குமாரி (உள்துறை அமைச்சகத்தின் காவல்துறை ஆய்வாளர்)
    • கமல் சேகாவத் (ஏஎஸ்பி, ராஜஸ்தான் காவல்துறையின் உதவிக் கண்காணிப்பாளர்).

  • தெற்கு சூடானின் ஜூபாவில் நடைபெற்ற ஐ.நா. திட்டத்தின் விருது வழங்கும் விழாவில் அவர்களுக்கு ஐ.நா. விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்