2015-2019 ஆம் ஆண்டில் இந்திய மக்களின் பிறப்பின் போது எதிர்பார்க்கப்படும் ஆயுட் காலம் 69.7 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் 1970-75 ஆம் ஆண்டில் 49.7 ஆக இருந்த பிறப்பு ஆயுட்காலம் ஆனது 20 ஆண்டுகள் கழித்து, 2015-2019 ஆம் ஆண்டில் 69.7 ஆக உள்ளது.
இருப்பினும், இது இன்னும் 72.6 என்ற உலக சராசரி மதிப்பிற்குக் கீழே தான் உள்ளது.
மாதிரிப் பதிவு அமைப்பு மூலம் இந்தத் தரவானது வெளியிடப்பட்டது.
இது உள்துறை அமைச்சகத்தின் பொதுப் பதிவாளர் மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் மூலம் வெளியிடப் பட்டது.
பிறப்பின் போதான ஆயுட்காலம் மற்றும் ஒரு வருடம் அல்லது ஐந்து வருடங்களின் போதான ஆயுட்காலம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள இடைவெளி மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகமாக உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் குழந்தை இறப்பு விகிதம் அதிக அளவாக 43 உள்ளது.
உத்தரப் பிரதேசமானது 38 என்ற குழந்தை இறப்பு விகிதத்துடன் இதில் இரண்டாவது இடத்தில் உள்ளது
ஒடிசாவில் 45.7 ஆக இருந்த பிறப்பு ஆயுட்காலம் ஆனது 69.8 ஆக உயர்ந்துள்ளது.
ஒடிசாவைத் தொடர்ந்து தமிழகத்தில் 49.6 ஆக இருந்த பிறப்பு ஆயுட்காலம் ஆனது 72.6 ஆக அதிகரித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், 65.6 ஆண்டுகள் என்ற பிறப்பு ஆயுட்காலத்துடன் 2வது மிகக் குறைந்த ஆயுட்காலத்தினைக் கொண்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பிறப்பின் போதான ஆயுட்காலம் ஆனது 65.3 ஆக உள்ளது.
பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இருபாலர் பிரிவிலும் நகர்ப்புறத்தை விட கிராமப் புறத்தில் பிறப்பின் போதான ஆயுட்காலமானது அதிகமாக உள்ள ஒரே மாநிலம் கேரளாவாகும்.
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் பெண்களை விட ஆண்களின் ஆயுட்காலம் அதிகமாக இருக்கும் மாநிலங்கள் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகியவை மட்டுமே ஆகும்.