இந்திய மனநலச் சங்கத்தின் 73வது ஆண்டு தேசிய மாநாடு விசாகப்பட்டினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய தேசிய மாநாடு 37 ஆண்டுகளுக்கு முன்பு விசாகப் பட்டினத்தில் நடத்தப் பட்டது.
சமூகத்தில் போதைப் பொருள் மற்றும் மது துஷ்பிரயோகம், மாணவர்களிடையே மன அழுத்தம் மற்றும் அதிகரித்து வரும் தற்கொலைகள், மனச்சோர்வு மற்றும் பதட்டம், முதுமைப் பிரச்சினைகள் மற்றும் மறதி நோய் ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் கலந்தாலோசிக்கப் படும்.
இந்த ஆண்டில் இந்த மாநாட்டிற்கான கருத்துரு, 'மனங்களை இணைத்து... தலைமுறைகளை இணைத்தல்' (Bridging minds … Connecting generations) என்பதாகும்.