இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய நோய்த் தடுப்பு ஊக்கி ஆய்வியல் நிறுவனத்தின் சோதனைக் கருவி
April 29 , 2022 1203 days 486 0
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய நோய்த் தடுப்பு ஊக்கி ஆய்வியல் நிறுவனமானது, ஹீமோபிலியா மற்றும் வான் வில்லிபிராண்ட் நோய் (Von Willebrand’s disease) ஆகிய நோய்களைப் பரிசோதிப்பதற்காக வேண்டி எளிய மற்றும் விரைவான முடிவினை வழங்கக் கூடிய சோதனைக் கருவியை உருவாக்கியுள்ளது.
இந்தக் கருவியானது, இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டகத்திடமிருந்து அனுமதியைப் பெற்று, அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்வதற்கான ஒரு அனுமதியையும் பெற்றுள்ளது.
வான் வில்லிபிராண்ட்ஸ் நோயானது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஓர் இரத்தப் போக்கு நோயாகும்.