மத்திய அரசானது, மக்களவை உறுப்பினர் கன்வர் சிங் தன்வர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் ஜஷ்வந்த் சிங் பர்மர் ஆகியோரை இந்திய மறுவாழ்வு சபையின் (RCI) உறுப்பினர்களாக நியமித்துள்ளது.
1992 ஆம் ஆண்டு இந்திய மறுவாழ்வு சபை சட்டத்தின் கீழ் அவர்களின் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அறிவிப்புத் தேதியிலிருந்து அல்லது அடுத்த உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை, இவற்றில் எது நீண்டதோ அதுவரை அவர்கள் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள்.