TNPSC Thervupettagam

இந்திய மின்னணு வர்த்தக சபை

July 22 , 2026 13 hrs 0 min 40 0
  • இந்திய இணையம் மற்றும் அலைபேசி சங்கமானது (IAMAI) பெங்களூருவில் இந்திய மின்னணு வர்த்தக சபையை (ECCI) அறிமுகப்படுத்தியது.
  • ECCI என்பது டிஜிட்டல் வர்த்தக சூழலைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் வலுப்படுத்தவும் அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் தேசிய தொழில் சபை ஆகும்.
  • இது மின்னணு வர்த்தகத் தளங்கள், தளவாடங்கள் வழங்குநர்கள், கட்டண நிறுவனங்கள் மற்றும் அரசு ஒழுங்குமுறை அமைப்புகளை இணைக்கும் ஓர் ஒருங்கிணைப்பு அமைப்பாகச் செயல்படுகிறது.
  • கொள்கை வாதங்கள், எல்லை தாண்டிய மின்னணு வர்த்தகத் தளங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (MSME) டிஜிட்டல் தத்தெடுப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான வர்த்தகம் ஆகியவற்றை ஆதரிப்பதை இந்த சபை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவின் டிஜிட்டல் வர்த்தகத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்க ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய மின்னணு வர்த்தகத் தளங்கள் உச்சி மாநாட்டையும் (IECS) இந்த சபை ஏற்பாடு செய்யும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்