இந்திய ரிசர்வ் வங்கியின் 29வது நிதி நிலைத்தன்மை அறிக்கை
July 8 , 2024 426 days 446 0
2024 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில், பட்டியலியப்பட்ட வணிக வங்கிகளின் (SCBs) இடர் உண்டாக்கும் சொத்துக்கள் மீதான மூலதன விகிதம் (CRAR) மற்றும் பொதுப் பங்கு அடுக்கு 1 (CET1) விகிதம் ஆகியவை முறையே 16.8% மற்றும் 13.9% ஆக இருந்தது.
பட்டியலியப்பட்ட வணிக வங்கிகளின் மொத்த வாராக் கடன்கள் (GNPA) விகிதம் ஆனது பல ஆண்டுகளில் இல்லாத வகையில் 2.8 சதவீதமாக குறைந்துள்ளது.
அவற்றின் நிகர வாராக் கடன்கள் (NNPA) விகிதம் ஆனது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 0.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) சரியான நிலையில் உள்ள நிலையில் CRAR 26.6 சதவீதமாகவும், GNPA விகிதம் 4.0% ஆகவும், சொத்துகள் மீதான வருமானம் - நிகர வருமானம் மற்றும் மொத்தச் சொத்துக்களுக்கு இடையிலான விகிதம் - (RoA) முறையே 3.3% ஆகவும் உள்ளது.
CRAR என்பது வங்கியின் நிதி வலிமையின் அளவீடு ஆகும்.
16.8% CRAR என்பது ஒவ்வொரு 100 அலகு இடர் உண்டாக்கும் சொத்துக்களால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டுவதற்கும் 16.8 அலகு மூலதனத்தை வங்கி கொண்டுள்ளது.
GNPA விகிதம் ஆனது, திருப்பிச் செலுத்தப்படாத வங்கியின் கடன்களின் சதவீதத்தை மதிப்பிடுகிறது.