இந்திய ரூபாய் மதிப்பிலான வரம்பு நிர்ணயிக்கப்பட்ட கடன் வசதி
October 27 , 2024 304 days 257 0
இந்திய அரசானது, மொரீஷியஸ் நாட்டு அரசுக்கு 487.60 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வரம்பு நிர்ணயிக்கப்பட்ட கடன் வசதியை பெறுவதற்கான ஒரு அனுமதியினை வழங்கியுள்ளது.
எந்தவொரு நாட்டிற்கும் இந்தியாவினால் வழங்கப்பட்ட முதல் ரூபாய் மதிப்பிலான வரம்பு நிர்ணயிக்கப்பட்ட கடன் வசதி இதுவாகும்.
இது இந்திய மேம்பாட்டு மற்றும் பொருளாதார உதவித் திட்டத்தின் (IDEAS) கீழ் திட்ட நிதியுதவிக்காக வழங்கப்படுகிறது.
IDEAS என்ற முன்னெடுப்பானது, சலுகைக் கடன்கள் மூலம் பங்குதார நாடுகளில் மேற் கொள்ளப் படும் மேம்பாட்டுத் திட்டங்களை ஆதரிக்கிறது.
இந்தத் திட்டத்திற்கு பாரத் ஸ்டேட் வங்கி சலுகை அடிப்படையில் நிதியளிக்கும்.