இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் கரடிகள் குறித்த ஆய்வு
October 24 , 2026 15 hrs 0 min 17 0
டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII), இந்தியாவில் காணப்படும் நான்கு வகையான கரடி இனங்களின் எண்ணிக்கை, பரவல் மற்றும் புவியியல் எல்லைகளை மதிப்பிடுவதற்கான இந்தியாவின் முதல் தேசிய அளவிலான ஆய்வைத் தயார் செய்து வருகிறது.
இமயமலை பழுப்பு நிறக் கரடி, ஆசியக் கருங்கரடி, தேன் கரடி மற்றும் சூரியக் கரடி ஆகியவையே அந்த நான்கு இனங்களாகும். இவை உர்சிடே (Ursidae) என்ற பாலூட்டி குடும்பத்தைச் சேர்ந்தவையாகும்.
பழுப்பு நிறக் கரடியின் (உர்சஸ் ஆர்க்டோஸ்) ஒரு துணை இனமான இமயமலை பழுப்பு நிறக் கரடியானது உலகளவில் தீவாய்ப்பு கவலை குறைந்த இனமாக (LC) உள்ளது. அதே வேளையில் மற்ற மூன்று கரடிகளும் IUCN-இன் செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனப் (VU) பிரிவில் உள்ளன.
இவற்றின் அறிவியல் பெயர்கள் உர்சஸ் ஆர்க்டோஸ் (பழுப்பு நிறக் கரடி), உர்சஸ் திபெட்டானஸ் (ஆசியக் கருங்கரடி), மெலுர்சஸ் உர்சினஸ் (தேன் கரடி) மற்றும் ஹெலார்க்டோஸ் மலாயானஸ் (சூரியக் கரடி) என்பனவாகும்.
முக்கியமான வாழ்விடங்கள், மனித-கரடி மோதல் மண்டலங்கள் மற்றும் சிறந்த கண்காணிப்பு மற்றும் வாழ்விட மேலாண்மை தேவைப்படும் பகுதிகளை அடையாளம் காண இந்த ஆய்வு உதவும். சுமார் 20,000 தேன் கரடிகள் இருந்ததாகக் கூறப்படும் முந்தைய மதிப்பீடு இந்தியத் துணைக்கண்டத்தைக் குறிப்பதாகும்.