இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர்களுக்கான “இந்தியாவை அறிந்து கொள்” திட்டம்
August 20 , 2019 2179 days 669 0
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று “இந்தியாவை அறிந்து கொள்” என்ற திட்டத்தின் (KIP - Know India Programme) 54வது பதிப்பின் கீழ் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது.
54வது KIP ஆனது பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய பங்காளர் மாநிலங்களுடன் இணைந்து 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 25 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
KIP ஆனது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர்களுக்காக (18 வயது முதல் 30 வயது வரை) மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தினால் ஒருங்கிணைக்கப்படுகின்றது.