இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புருனேவின் உச்ச நீதிமன்ற நீதிபதி
October 7 , 2019 2134 days 617 0
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் நீதிபதியான கண்ணன் ரமேஷ் என்பவர் புருனே சுல்தானகத்தின் உச்ச நீதிமன்றத்தின் நீதி ஆணையராக புருனேவின் சுல்தான் ஹசனல் போல்கியா என்பவரால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
கண்ணன் ரமேஷ் என்பவர் இரண்டு வருட காலத்திற்கு நீதித் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாதம் புருனேவின் உச்ச நீதிமன்றத்தின் நீதி ஆணையராக அங்கு பணியாற்றி அதன் வணிக வழக்குகள் மற்றும் சில உரிமையியல் வழக்குகள் குறித்து இவர் முடிவு செய்வார்.
மேலும் 54 வயதான இவர் சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தின் முழுநேர நீதிபதியாகவும் தனது பதவியைத் தொடருவார்.
சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி ரமேஷ் மே 2015 ஆம் ஆண்டில் நீதித் துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.