இந்திய வானிலை ஆய்வு மையமானது தனது 146வது துவக்க தினத்தை 2021 ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று கொண்டாடியது.
இது கல்கத்தாவில் 1875 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இது இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் ஓர் அமைப்பாகும்.
இது வானிலை ஆய்வு, வானிலை முன்னறிவிப்பு மற்றும் நில அதிர்வு ஆகியவற்றிற்குப் பொறுப்பான ஒரு முதன்மை நிறுவனமாகும்.
உலக வானிலை அமைப்பின் ஆறு பிராந்திய சிறப்பு வானிலை மையங்களில் இதுவும் ஒன்றாகும்.
வட இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வெப்ப மண்டலச் சூறாவளிகளுக்கான எச்சரிக்கைகளை முன்னறிவித்து அவற்றைப் பரப்புதல் மற்றும் அவற்றுக்குப் பெயரிடுதல் ஆகிய பொறுப்புகளை இது கொண்டு உள்ளது.
இதில் மலாக்கா நீர்ச்சந்தி, வங்காள விரிகுடா, அரபிக் கடல் மற்றும் பாரசீக வளைகுடா ஆகியவை அடங்கும்.