பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (DRDO), ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள் (IDS) மற்றும் முப்படையினருடன் இணைந்து இந்திய வானொலி மென்பொருள் கட்டமைப்பு (IRSA) 1.0 பதிப்பினை வெளியிட்டுள்ளது.
புது டெல்லியில் உள்ள DRDO பவனில் நடைபெற்ற ஒரு தேசிய பயிலரங்கின் போது IRSA 1.0 அறிமுகப்படுத்தப்பட்டது.
IRSA என்பது மென்பொருள் ரீதியாக இயங்கும் ரேடியோக்களுக்காக (SDR) வடிவமைக்கப்பட்ட ஒரு மென்பொருள் அம்சம் ஆகும்.
IRSA தரநிலையானது இடைமுகங்கள், செயலி நிரலாக்க இடைமுகங்கள், செயல்படுத்தல் சூழல்கள் மற்றும் அலைவடிவ பெயர்வுத்திறன் வழிமுறைகளை வரையறுக்கிறது.
இது இந்திய ஆயுதப் படைகள் முழுவதும் பயன்படுத்தப்படும் இராணுவத் தகவல் தொடர்பு அமைப்புகளில் ஒருங்கிணைந்த இயங்குதன்மையை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.