பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று இந்திய விண்வெளிக் கூட்டமைப்பினை டிஜிட்டல் ரீதியில் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்திய விண்வெளிக் கூட்டமைப்பானது விண்வெளி மற்றும் செயற்கைக் கோள் நிறுவனங்களுடன் தொடர்புடைய ஒரு முதன்மைத் தொழில்துறையாகும்.
இந்தக் கூட்டமைப்பின் ஸ்தாபன உறுப்பினர்கள், நெல்கோ (டாட்டா குழுமம்), பாரதி ஏர்டெல், லார்சென் & டியூப்ரோ, மேப்மை இந்தியா, ஒன்வெப், வால்சந்த் நகர் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆனந்த் டெக்னாலஜி லிமிடெட் ஆகியனவாகும்.
அதன் முக்கிய உறுப்பினர்களாவன : BEL, கோத்ரெஜ், ஹியூஜெஸ் இந்தியா, சென்டம் எலக்ட்ரானிக்ஸ், அசிஷ்டா-BST ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மக்சார் இந்தியா ஆகியனவாகும்.