இந்திய விலங்கியல் ஆய்வு அமைப்பின் புதியப் புத்தகம்
August 12 , 2022 1100 days 677 0
இந்திய விலங்கியல் ஆய்வு அமைப்பானது நாட்டில் காணப்படும் 1,331 பறவை இனங்களைப் பற்றிய ஒரு கள வழிகாட்டிப் புத்தகத்தினை வெளியிட்டுள்ளது.
இந்தப் புத்தகமானது வரைபடங்களைப் பயன்படுத்தும் மற்ற புத்தகங்களைப் போல அல்லாமல் குறிப்பாக பறவைகளின் தரமான புகைப்படங்களைக் காட்சிப் படுத்தச் செய்கிறது.
இந்நூல் நாட்டில் காணப்படும் 1331 வகையான பறவைகள், அவற்றின் தற்போதைய நிலை மற்றும் அவை பரவிக் காணப்படும் இடங்கள் சார்ந்த விவரங்கள் பற்றிய ஒரு ஆயத்தக் கணக்காய்வுப் புத்தகமாக விளங்கும்.
‘கள வழிகாட்டி, இந்தியப் பறவைகள்' என்ற இந்தப் புத்தகத்தை விளம்பரப் படுத்தச் செய்வதற்காக வேண்டி, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இரு இடங்களில் இரண்டு நிகழ்வுகளை இந்திய விலங்கியல் ஆய்வு அமைப்பு ஏற்பாடு செய்தது.