TNPSC Thervupettagam

இந்திய விவசாயிகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரக (UAE) தொழிற் துறைகளுக்கிடையேயான மின்னணு – சந்தைத் தளம்

September 2 , 2020 1755 days 647 0
  • ஐக்கிய அரபு அமீரகமானது “AGRIOTA” எனப்படும் ஒரு புதிய தொழில்நுட்பத்தால் செயல்படுத்தப்படும் வேளாண் பொருள் வர்த்தகத் தளத்தை வெளியிட்டுள்ளது
  • இது இந்தியாவைச் சேர்ந்த ஊரக விவசாயிகள் மற்றும் வளைகுடா உணவுத் தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்கிடையே ஒரு இணைப்புப் பாலமாகச் செயல்பட உள்ளது.
  • இந்த மின்னணு-சந்தைத் தளமானது இந்திய விவசாயிகள் இடைத்தரகர்களை அணுகாமல் நேரடியாக ஐக்கிய அரபு அமீரக உணவுத் தொழிற்சாலைகளை அணுக அனுமதிக்கின்றது.
  • இது விநியோகச் சங்கிலியை ஒருங்கிணைக்கின்றது.
  • இது அனைத்துப் பங்குதாரர்களுக்கும் தொடர்பு கண்டறிதல் மூலம் ஏற்படுத்தப்படும் மதிப்பை உறுதி செய்யவுள்ளது.
  • இந்தத் தளமானது UAE நாட்டின் (United Arab Emirates) உலகளாவிய உணவுப் பாதுகாப்புக் குறியீட்டை மேம்படுத்த உதவ உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்