இந்திய வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு நதிகளின் பெயர்கள் வழங்கீடு
January 30 , 2023 929 days 444 0
வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) ஆனது, நதிகளின் பெயர்களை இந்திய வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு இட்டு அதனைக் குறியீட்டுப் பெயராகவும் முத்திரைப் பெயராகவும் பயன்படுத்த உள்ளதாக முன்மொழிந்துள்ளது.
கங்கை, பிரம்மபுத்திரா, காவிரி, கோதாவரி போன்ற நதிகளின் பெயர்களை அதன் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு வழங்க உள்ளது.
இது வேளாண் உற்பத்திப் பொருட்களின் பரவலினை அதிகரிக்கும்.
வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் நடவடிக்கையானது, 2021-22 ஆம் ஆண்டில் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை 25.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தியது.
இது நாட்டின் மொத்த வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் 51% ஆகும்.