TNPSC Thervupettagam

இந்திய வௌவால்கள் அறிக்கை - 2024-25 நிலை

April 20 , 2026 2 days 65 0
  • "இந்திய வௌவால்களின் நிலை (2024-25)" என்ற முதல் தேசிய அறிக்கை, இந்தியாவில் உள்ள வௌவால் இனங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எடுத்துக்காட்டுகிறது.
  • இது இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் பன்னாட்டு வௌவால் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் சுமார் 135 வௌவால் இனங்கள் உள்ளன, இதில் 16 வட்டார உயிரினங்கள் (இந்தியாவில் மட்டுமே காணப்படுபவை) அடங்கும்.
  • IUCN தரவுகளின்படி சுமார் 7 இனங்கள் அச்சுறுத்தல் நிலைக்கு உள்ளாகியுள்ளன, மேலும் 35 இனங்கள் குறித்த சரியான தரவுகள் இல்லை.
  • வௌவால்கள் மகரந்தச் சேர்க்கை, விதைகளை பரப்புதல், பூச்சிக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரிக்க உதவுகின்றன.
  • முக்கிய அச்சுறுத்தல்களில் நகரமயமாக்கல், காடழிப்பு, பருவநிலை மாற்றம் மற்றும் கோவிட்-19 க்குப் பிந்தைய எதிர்மறையான எண்ணம் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்