பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம் (BNHS) டேராடூனில் தேசிய தூய்மை கங்கைக்கான திட்டத்தின் கீழ் ஒரு வளங்காப்பு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
கங்கைப் படுகையில் அழிந்து வரும் இந்திய ஸ்கிம்மர் பறவையையும் அதன் கூடு கட்டும் வாழ்விடங்களையும் பாதுகாப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இது இந்திய ஸ்கிம்மர் பறவைகள் மற்றும் பிற நதி வாழ் பறவைகளுக்கு முக்கியமான கூடு கட்டும் இடங்களான நதி மணல் திட்டுகளில் கவனம் செலுத்துகிறது.
மணல் சுரங்கம், நதி ஓட்ட மாற்றம் மற்றும் மனித தொந்தரவு போன்ற அச்சுறுத்தல்கள் கண்காணிப்பு, வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் சமூக ஈடுபாடு மூலம் நிவர்த்தி செய்யப் படுகின்றன.
அவற்றின் கூடுகளைப் பாதுகாக்க, பறவைகளைக் கண்காணிக்க, அச்சுறுத்தல்களைக் குறைக்க மற்றும் தரவுச் சேகரிப்பில் உதவ உள்ளூர் மக்களுக்கு 'கூடு பாதுகாவலர்கள்' மற்றும் 'ஆற்றுப் பாதுகாவலர்கள்' என்ற நிலையில் அவர்கள் செயலாற்றப் பயிற்சி அளிக்கப்படும்.
இந்தத் திட்டம் பிளாக்-பெல்லிட் டெர்ன், ரிவர் டெர்ன், ரிவர் லாப்விங், கிரேட் திக்-கினீ, லிட்டில் டெர்ன் மற்றும் லிட்டில் பிராட்டின்கோல் போன்ற எண்ணிக்கையில் குறைந்து வரும் பிற நதி வாழ் பறவைகளையும் ஆதரிக்கிறது.
உலகின் இந்திய ஸ்கிம்மர் பறவைகளில் கிட்டத்தட்ட 90% இந்தியாவில் காணப் படுவதுடன், இந்த இனங்கள் உயிர்வாழ்வதற்கு அதன் வளங்காப்பு மிக முக்கியமானது ஆகும்.